லேபிள்கள்

20.2.14

பிளஸ்2 செய்முறை தேர்வில் விபரீதம்: ரசாயனத்தை தவறுதலாக விழுங்கிய மாணவி பலி

திருவிடைமருதூர்: பிளஸ் 2 செய்முறைத் தேர்வில், பிப்பெட்டில் உறிஞ்சியபோது  வாய்க்கு வந்த  ரசாயனத்தை தவறுதலாக விழுங்கிய
மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். தஞ்சை மாவட்டம், ஆடுதுறை அடுத்த ஐம்பது சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர்  நடராஜன், விவசாயி.  இவரது மகள் அகிலாண்டேஸ்வரி (17). ஆடுதுறையில் உள்ள  பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 14ம் தேதி காலை இவருக்கு வேதியியல்  செய்முறைத்தேர்வு நடந்தது. அப்போது பரிசோதனைக்  கூடத்தில் அகிலாண்டேஸ்வரி  ரசாயனத்தை பிப்பெட் சாதனத்தில் உறிஞ்சியுள்ளார். வேகமாக உறிஞ் சியதால், வாய்க்கு  வந்த ரசாயனத்தை அவர் தவறுதலாக விழுங்கிவிட்டார்.  இதனால் ஆசிரியர்கள்,   மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். 

ஏற்கனவே அகிலாண்டேஸ்வரிக்கு ஆஸ்துமா இருந்ததாக கூறப்படுகிறது. ரசாயனமும்  சென்றதால் மூச்சு  திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் உள்ள  ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர்  மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள  ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை  அளித்தும் பலனின்றி  நேற்றுமுன்தினம் அகிலாண்டேஸ்வரி இறந்தார். இதுகுறித்து திருவிடைமருதூர்   போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து பிளஸ் 2 செய்முறைத்  தேர்வின்போது, ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளை  விழிப்புணர்வுடன் கண்காணிக்க  கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக