லேபிள்கள்

21.2.14

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நாளை பணி நியமனம் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் (ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பெற்று இணையான பாடத்திட்டம்
உள்ளிட்ட பிரச்சனைகள் காராணமாக சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்னரும் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. 
இவ்வாறு பாதிக்கப்பட்ட பலர் நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்றனர்.அவ்வாறு உத்தரவு பெற்றவர்களுக்கும் பல்வேறு பிரச்சனையால் பணி வாய்ப்பு கிடைக்காமல் இருந்த பலருக்கு கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் சான்றிதழ்சரிபார்ப்பு நடைபெற்றது. அவர்களில் தகுதியானவர்களுக்கு கடந்த சில நாட்களாக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் பணி நியமன ஆணை தனித்தனியாக வழங்கப்பட்டுவருகின்றன அவர்களில்)152 பேருக்கு நாளை பணி நியமன கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் தமிழ் மொழிப் பாடத்திற்கு 16பேரும், ஆங்கில பாடத்திற்கு 74பேரும், 
கணித பாடத்திற்கு 27பேரும், அறிவியல் 14பேரும், சமூக அறிவியல் 21பேரும் நியமிக்கப்பட உள்ளனர்.இதுகுறித்து முறையான சுற்றறிக்கை அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அனுப்ப வைக்க உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக