லேபிள்கள்

13.7.14

நேற்று (12.07.14 ) நமது மாநில செயற்குழுவில் மாநில , மாவட்ட பொறுப்பாளர்களால் வலியுறுத்தப்பட்ட செய்திகள்

* தொடக்க கல்வித்துறையில் 2004 முதல் பட்டதாரி ஆசிரியர்கள் 
 நியமிக்க பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு முதுகலை 
 பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

* 2004 - 2006 வரையான பணிக்காலத்தை பணிக்காலமாக 

 அறிவிக்க வேண்டும்

* தொடக்க கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 

  நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க 
  புதிய அரசாணை வெளியிட வேண்டும்

*
அறிவியல் உதவித் தொடக்க கல்வி அலுவலர் 
 பணியிடங்களை தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் 
 அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு பதவி உயர்வு 
 மூலம்நிரப்ப வேண்டும்.

*
தமிழக அரசு சட்டமன்ற தேர்தலின் போது அளித்த 
 வாக்குறுதிப்படி பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து 
 பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

*
பங்களிப்பு ஒய்வூதிய திட்டத்தில் தொடக்க கல்வித்துறையில் 
 பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக 
 பிடித்தம் செய்யப்பட்ட தொகைக்கு கணக்கிட்டுத்தாள் வழங்க 
 வேண்டும்.

*
தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி 
 ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அலகு விட்டு அலகு 
 மாறுதல் நடத்த வேண்டும்
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக