கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு, சிறந்த பள்ளிகளுக்கு பரிசாக, ரூ.80 லட்சம் வழங்க அரசு நிதி ஒதுக்கியுள்ளது. காமராஜர் பிறந்த நாள், கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுவதை யொட்டி, சிறந்த அரசு
பள்ளிகளை ஊக்குவிப்பதற்கான பரிசளிப்பு திட்டம் ஆண்டுதோறும், செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கலெக்டர் தலைமையில், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உள்ளிட்ட குழுவினர், ஒரு மாவட்டத்துக்கு 4 சிறந்த பள்ளிகளை தேர்வு செய்கின்றனர். இவ்வாறு தேர்வு செய்யப்படும், மேல்நிலை பள்ளிக்கு ரூ.1 லட்சமும், உயர்நிலை பள்ளிக்கு ரூ.75 ஆயிரமும், நடுநிலை பள்ளிக்கு ரூ.50 ஆயிரம், தொடக்க பள்ளிக்கு ரூ.25 ஆயிரமும் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. 201415 ம் கல்வியாண்டில், பரிசு வழங்குவதற்காக, பள்ளி கல்வித்துறைக்கு ரூ.56 லட்சமும், தொடக்க கல்வித் துறைக்கு ரூ.24 லட்சமும் அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இந்த நிதி மூலம், அந்த பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக