லேபிள்கள்

14.7.14

பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு: முரண்பாடுகளை நீக்க கோரிக்கை

By திண்டுக்கல்

First Published : 13 July 2014 12:06 AM IST
பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெறுவதில் உள்ள முரண்பாடுகளை நீக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டமைப்பின் சார்பில், மாநில செயற்குழு கூட்டம் திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் ஆனந்த கணேஷ் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலர் பேட்ரிக் ரெய்மண்ட் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் செய்யப்பட்டு, தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரிய தர எண் அடிப்படையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும். தொடக்க கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் பணியேற்ற நாளை அடிப்படையாக கொண்டு, நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும். அறிவியல் உதவி தொடக்க கல்வி அலுவலராக, அறிவியல் பட்டம் பெற்ற நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் இல்லாத நிலையில், அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கே பதிவு உயர்வு வழங்க வேண்டும்.
தொகுப்பூதிய பணிக்காலத்தை ரத்து செய்யவேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய முறையினை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநில பொருளாளர் செல்லையா, மகளிர் அணி செயலர் ஜேனட் பொற்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக