லேபிள்கள்

19.7.14

முதலுதவி பெட்டி, தீயணைப்பு சாதனம் இருக்க வேண்டும்; பள்ளிகளுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை

தமிழக பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் .சபீதா உத்தரவுபடிபள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் அனைத்துபள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி
உள்ளார்அதில் கூறியிருப்பதாவது:-

மழைக்காலங்களில் இடிமின்னல் ஆகியவற்றின் போதுமாணவர்களோ அல்லது ஆசிரியர்களோ மரத்தின் அடியில்நிற்கக்கூடாது என்று அறிவுரை வழங்க வேண்டும்.

பள்ளிக்கூட வளாகத்தில் உள்ள மதில் சுவர்கள் போதிய அளவுக்குஉயரமாக உள்ளதா என்பதை பார்த்து உயரம் இல்லாவிட்டால்உயரமான அளவுக்கு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளிக்கூடங்களில் கட்டிடங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இடிந்துவிழும் நிலையில் இருந்தால் தகவல் தெரிவித்துவிட்டு அதைபாதுகாப்பாக அகற்ற வேண்டும்.

பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் அல்லது ஆசிரியர்கள் ஏதாவதுகீழே விழுந்தாலோ அல்லது ஏதாவது காயம் ஏற்பட்டாலோஅவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும்.எனவே அனைத்து பள்ளிகளிலும் முதலுதவி செய்யும் வகையில்மருத்துவ பொருட்கள் அடங்கிய முதலுதவி பெட்டி இருக்கவேண்டும்.

அதுபோல ஏதாவது தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு படையினர்வருமுன்னதாக உடனடியாக தீயை அணைக்க தீயணைப்புசாதனங்கள் எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும்.

விளையாட்டு நேரத்தின்போது ஈட்டி எறிதல்குண்டு எறிதல்உள்ளிட்ட பொருட்களை கவனமாக பாதுகாப்பாக கையாளவேண்டும்.

பள்ளிக்கூடங்களின் அருகில் வேகத்தடை இருக்க வேண்டும்.இல்லாவிட்டால் வேகத்தடை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

பள்ளிக்கூடங்கள் அல்லது பள்ளிக்கூடங்களின் அருகில் புதர்கள்ஏதாவது இருந்தால் அவற்றை அகற்ற ஏற்பாடு செய்ய வேண்டும்.

பள்ளிக்கூட வளாகத்தை சுத்தமாகவும்பாதுகாப்பாகவும்வைத்திருக்க வேண்டும்.


இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக