லேபிள்கள்

13.7.14

தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் - TNGTF பொதுச்செயலாளர்

2004 ம் ஆண்டு முதல் தொடக்க கல்வித்துறையில்  பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்க படுகின்றனர். அவர்களுக்கு எவ்வித பதவி உயர்வுக்கான ஆணையை அரசு வெளியிடவில்லை. இதனால் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு அடையமுடியாமல் மணம் வருந்தி கொண்டு இருக்கிறார்கள்.


2004 ஆம் ஆண்டு முதல் நாம் பதவி உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். தொடக்க கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு  வழங்க வேண்டும் மேலும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டதாரி ஆசிரியர்களுக்கு கிடைக்க புதிய அரசாணை வெளியிடவேண்டும்  என வலியுறுத்தினார்


     பல மாவட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கூறிய பொதுச்செயலாளர். முடிவில், திருச்சியில் விரைவில் மாநில அளவில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடைபெற இருக்கிறது. அதற்கான நாளும் நேரமும் பின்னர் அறிவிக்கப்படும். அவ்வுண்ணவிரதத்தை அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் பகுதி பட்டதாரி ஆசிரியர்களுடன் கலந்து கொண்டு வெற்றியடைய செய்ய கேட்டுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக