லேபிள்கள்

11.10.14

ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.) இருந்து விலக்கு அளிக்கப்பட்டும் தகுதிகாண் பருவம் மற்றும் பணப் பலன் கிடைக்காமல் 18 ஆயிரம் ஆசிரியர்கள் சிக்கலில் தவிப்பு

தமிழகத்தில் 2010 முதல்டி..டி., தேர்வு நடைமுறையில் உள்ளது.
     ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (டி.ஆர்.பி.) 2012 மார்ச்சில்  வெளியிடப்பட்ட உத்தரவில் (எண்: 04/2012), 2010 ஆகஸ்ட்க்கு முன்ஆசிரியர் பணிநியமனம் தொடர்பாக சான்றிதழ் சரிபார்ப்பு அல்லது அதுதொடர்பான நடவடிக்கைக்கு உட்பட்டிருந்தால், 2010 ஆகஸ்ட்க்கு க்கு பின் பணி நியமனம் செய்வதில்அந்த ஆசிரியருக்குடி..டி., தேர்ச்சியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்என தெரிவிக்கப்பட்டது.  இதன் அடிப்படையில், 2010 முதல் 2013 வரை அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் 18 ஆயிரம் பட்டதாரி மற்றும்இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்இவர்களுக்கு 'டி..டி.,தேர்ச்சி தேவையில்லைஎன டி.ஆர்.பி., அறிவித்ததுஇம்முறையில்பெரும்பாலான ஆசிரியர்கள் பணியேற்று மூன்று ஆண்டுகளை கடந்தநிலையிலும்அவர்களுக்கான தகுதிகாண் பருவம் முடியவில்லை.அவர்களின் பணி பதிவேடுகளை பரிசீலிக்கும் கல்வி அதிகாரிகள், 'ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பின் தான் உங்களது தகுதிகாண் பருவத்தை முடிக்க இயலும்என கூறி திருப்பி அனுப்புகின்றனர்.உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வுஊக்கஊதியம்பண்டிகை கால முன்பணம்வங்கி கடன் வாய்ப்பு உட்படஎவ்வித பலனும் கிடைக்கவில்லை.
       
        பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறுகையில், டி..டி., தேர்வில்விலக்கு அளித்தும்இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை.தகுதிகாண் பருவத்தையும் முடிக்க முடியவில்லைஎன்றனர்.


               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக