தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் நாளை செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை தனியார் பள்ளிகள் அனைத்தும் செயல்படும் என்று தனியார் பள்ளிகள் சங்க செயலாளர் இளங்கோவன் அறிவித்துள்ளார். செவ்வாயன்று பள்ளிகள் மூடப்படும் என்ற முடிவை கைவிடுவதாக அறிவித்துள்ளார்.
அறிவித்தபடி தனியார் பள்ளி தாளாளர்கள் நாளை உண்ணாவிரதம் போராட்டம் நடத்துவர். தேர்வுகள் இருப்பதாக பள்ளிகள் மூடுவதை கைவிடுவதாக இளங்கோவன் விளக்கம் அளித்துள்ளார். முடிவில் மாற்றம் ஏன்?
தேர்வு நேரத்தில் பள்ளிகளை மூடுவதற்கு பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது. பள்ளிகள் மூடுவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை நாடவும் சிலர் திட்டமிட்டிருந்தனர். எதிர்ப்பு வலுத்ததால் பள்ளிகளை நாளை திறக்க சங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.
தனியார் பொறியியல் கல்லூரிகளும் செயல்படும்
தனியார் பெறியியல் கல்லூரிகள் நாளை வழக்கம்போல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்று தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஜெயலலிதா தண்டனையை கண்டித்து நாளை கல்லூரிகளை மூடும் முடிவு வாபஸ் பெறப்பட்டது. மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு கல்லூரிகளை திறப்பதாக அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக