'பள்ளிகள் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும்' என ஐகோர்ட் உத்தரவிட்டதால், நேற்று பள்ளிகள் செயல்பாடு குறித்து வீடியோ பதிவு செய்த முதன்மைக்கல்வி அதிகாரிகள், அதை கல்வித்துறை இயக்குனரகத்திற்கு அனுப்பினர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுவிக்க வலியுறுத்தி, 'தமிழகம் முழுவதும் நேற்று ஒருநாள் தனியார் பள்ளிகள் செயல்படாது' என கூட்டமைப்பினர் அறிவித்தனர். எதிர்ப்பு கிளம்பிய நிலையில், பள்ளிகள் மூடப்படுவதற்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இதைதொடர்ந்து 'பள்ளிகள் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும்' என தமிழக அரசுக்கு கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில் பள்ளிகள் மூடும் முடிவை கூட்டமைப்பினர் திடீரென வாபஸ் பெற்றனர். இதனிடையே பள்ளிகள் இயங்குவது குறித்து உறுதி செய்து வீடியோ எடுத்து அனுப்ப முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டது. இதன்படி பள்ளிகள் இயங்கியது குறித்து வீடியோவில் பதிவு செய்து அனுப்பப்பட்டது.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பள்ளிகள் இயங்குவது குறித்த வீடியோ பதிவு
'இ மெயிலில்' அனுப்பப்பட்டது. ஆசிரியர்கள், மாணவர்கள், பள்ளிக்கு வருகை குறித்தும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஐகோர்ட்டில் நாளை (இன்று அக்.,8) வழக்கு விசாரணைக்கு வரும்போது அரசு தரப்பில் இவை தாக்கல் செய்யப்படும்' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக