லேபிள்கள்

6.10.14

கல்வியியல் கல்லூரிகள்நாளை ஒருநாள் 'ஸ்டிரைக்'

         அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி, தனியார் கல்வியியல் கல்லூரிகள் அனைத்தும், நாளை (7ம் தேதி) ஒரு நாள் இயங்காது என, கல்வியியல் கல்லூரி கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு கல்வியியல்
கல்லூரிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும், தர்மபுரி லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் வருவான் வடிவேலன் மற்றும் கூட்டமைப்பு நிர்வாகிகள் நடராஜன், ரூபன், சூரஜ்மல் ஜெயின், கருப்பண்ணன், அசோக்குமார் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா, முதல்வராக இருந்தபோது, தமிழகத்தில் உயர்கல்வியை மேம்படுத்தி, இந்தியாவில் தமிழகத்தை உயர்கல்வியில் முதலிடத்தை பெறச் செய்ததுடன், பல்லாயிரக்கணக்கான ஆசிரிய, ஆசிரியைகளை உருவாக்கி, அவர்கள் குடும்பத்தை வளமையடைய செய்துள்ளார்.அவரை கைது செய்ததை கண்டிப்பதுடன், உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி, தமிழகத்திலுள்ள, 645 கல்வியியல் கல்லூரிகள், நாளை (7ம் தேதி) செயல்படாது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக