லேபிள்கள்

10.10.14

ஆதிதிராவிடர் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் : தற்போதைய நிலை தொடர மதுரை ஐகோர்ட் உத்தரவு

அரசு ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில்ஆசிரியர்கள்நியமனத்தை எதிர்த்து தாக்கலான வழக்கில், 'தற்போதைய நிலைதொடர வேண்டும்'
என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்பட்டி ராமர் தாக்கல் செய்த மனுநான்பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிஇடைநிலைஆசிரியர் பயிற்சி முடித்துள்ளேன்ஆசிரியர் தகுதித் தேர்வில் 64.23மதிப்பெண் பெற்றேன்இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்திற்கு,சான்றிதழ் சரிபார்ப்பிற்குஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்புவிடுத்தது.

'அரசு ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில், 669 இடைநிலைஆசிரியர்கள் பணியிடம்ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர்கள்மூலம் நிரப்பப்பட்டுள்ளதுகாலிப்பணியிடம் எதுவும் இல்லை,' எனஆக.,21ல் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.இந்நியமனங்களில் இடஒதுக்கீடு பின்பற்றவில்லை.ஆதிதிராவிடர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என விதிகளில்குறிப்பிடவில்லைஇட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டிருந்தால்எனக்குவேலை கிடைத்திருக்கும்ஆசிரியர்களை (669 பேர்)நியமித்ததாகக்கூறி வெளியான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.எனக்கு பணி வழங்க உத்தரவிட வேண்டும்என குறிப்பிட்டார்நீதிபதிடி.ராஜா முன் விசாரணைக்கு வந்ததுமனுதாரர் வக்கீல் வி.சசிக்குமார்ஆஜரானார்.


நீதிபதி உத்தரவுபணி நியமனங்களைப் பொறுத்தவரைதற்போதையநிலை தொடர வேண்டும்பள்ளிக் கல்வித் துறை செயலாளர்,ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் அக்., 14 ல் பதில் மனு செய்ய,நோட்டீஸ் அனுப்பப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக