ஆசிரியர் சேமநலநிதி கணக்கு தணிக்கை விவரங்களை சமர்பிக்காததால், தமிழகம் முழுவதும், 63 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, 'மெமோ' வழங்க, தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.தொடக்க மற்றும் நகராட்சி பள்ளியில் பணியாற்றும்
ஆசிரியர்களின், வருங்கால சேம நலநிதி கணக்கு மற்றும் ஐந்தாவது ஊதியக்குழு முடிவு இருப்பு தொகை தணிக்கை ஆகியவை, ஆண்டு தோறும், தமிழக தகவல் தொகுப்பு விவர மைய கமிஷனரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த ஆண்டு, 63 உதவிதொடக்கக் கல்வி அலுவலகங்கள், தணிக்கை விவரங்களை சமர்பிக்கவில்லை. இதனால், தமிழக தொடக்கக் கல்வி இயக்குனரகம், 63 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், அந்த அலுவலக பணியாளர்கள் மீது, நன்னடத்தை விதிமீறல் படி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக