10-ஆம் வகுப்பு தனி தேர்வர்களாக செய்முறைத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் இன்று (டிசம்பர் 12) விண்ணப்பிக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மார்ச், ஏப்ரல் 2015ம் இடைநிலை பள்ளி விடுப்பு சான்றிதழ் பொது தேர்வு எழுத விரும்பும் நேரடி தனி தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகளில் தங்களின் பெயர்களை பதிவு செய்து பயிற்சி பெற 11.6.2014 முதல் 30.6.14 வரையிலும் 29.10.14 முதல் 7.11.14 வரையிலும் அனுமதி வழங்கப்பட்டது.
மேற்கூறிய தேதிகளில் பெயர்களை பதிவு செய்யாமல் விடுபட்ட தனி தேர்வர்கள், இ.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்ற தனி தேர்வர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வரும் 12ம்தேதிக்குள் பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், அரசு தேர்வுகள் சேவை மையங்களிலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்யாத தனி தேர்வர்கள் இடைநிலை பள்ளி விடுப்பு சான்றிதழ் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுத அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக