பொதுத்தேர்வு தேதி அறிவித்துள்ள நிலையில், கோவைமாவட்டத்தில் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும், பாடங்கள்நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. அரையாண்டு தேர்வுகள், வரும் 10ம் தேதி
துவங்கவுள்ள நிலையில், முதன்மை கல்வி அதிகாரி தலைமையில்சிறப்புக்குழு, ஆய்வுப் பணிகளை, முழுவீச்சில் துவங்கியுள்ளது.
பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச் 5; பத்தாம் வகுப்புக்கு மார்ச் 19ல்,பொதுத்தேர்வுகள் துவங்கவுள்ளன. இந்நிலையில், அரையாண்டுதேர்வுகள் வரும் 10ம் தேதி துவங்க உள்ளன.பொதுத்தேர்வுகளைபொறுத்தவரை, கோவை மாவட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் தேர்ச்சிவிகிதம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த கல்வியாண்டில்,மாநில அளவில், தரப்பட்டியலில் மாவட்டம் முன்னேறியதுடன், அதிகமாணவர்களும், ரேங்க் பெற்றனர்.முழு பாடத்தையும் மாணவர்கள்எழுதவுள்ளதால், தற்போது அனைத்து பாடங்களும் நடத்திமுடிக்கப்பட்டு, மாதிரித் தேர்வுகள் பள்ளிகள் அளவில் நடத்தப்பட்டுவருகிறது. மேலும், கற்றலில் குறைபாடுள்ள மாணவர்கள் மீது,ஆசிரியர்கள் தனிக்கவனம் செலுத்தி வருகின்றனர். இத்துடன், காலை,மாலை மற்றும் விடுமுறை நாட்களில், சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன.
முதன்மை கல்வி அதிகாரி தலைமையில், தொடக்கக் கல்விஅலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், கூடுதல் முதன்மை கல்விஅலுவலர் உள்ளடக்கிய சிறப்புக்குழுவினர், பள்ளிகளில்மாணவர்களின் தரம் குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்படும்பயிற்சிகள் குறித்தும், ஆய்வுகள் செய்ய துவங்கியுள்ளனர்.தனியார்பள்ளிகளுக்கு இணையாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிமாணவர்களை தயார்படுத்துவதில், ஆசிரியர்கள் முழுக் கவனம்செலுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டை போன்று, நடப்புகல்வியாண்டிலும், அரசு பள்ளிகள் சிறப்பான செயல்பாட்டைவெளிப்படுத்த, நல்ல மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்குதனியாகவும், கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு தனியாகவும்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறுகையில், ''கோவைமாவட்டத்தில், செயல்படும் பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தை அதிகரித்து,தரப்பட்டியலில், முன்னேற முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.ஆசிரியர்களின் பங்களிப்பு பாராட்டும் விதத்தில் உள்ளது.''பொதுவாக,மாணவர்கள் பள்ளிக்கு அதிகப்படியான விடுப்பு எடுப்பதன்விளைவாகவே, தேர்ச்சி விகித பட்டியலில் முதலிடத்தை பிடிக்கமுடியாமல் போகிறது. பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளும்போது,அதிகப்படியான விடுப்பு எடுக்கும் மாணவர்களின் பெற்றோர்களை,நேரில் அழைத்து பேசியுள்ளோம். சிறப்புப் பயிற்சிகள்வழங்கப்பட்டுள்ளன. அரையாண்டு தேர்வு முடிந்த பின்,மாணவர்களின் நிலை குறித்து, ஆய்வு செய்து, மீண்டும் பயிற்சியின்தன்மை அதிகரிக்கப்படும்,'' என்றார்.
தனித்தேர்வராக எழுத கட்டாயப்படுத்தக் கூடாது!
'தேர்ச்சி விகிதத்தை மட்டும், நோக்கமாக கொண்டு செயல்படும் சிலபள்ளிகள், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பில் பின்தங்கியமாணவர்களை, தனித்தேர்வர்களாக எழுத கட்டாயப்படுத்துவதாகபுகார்கள் பெறப்பட்டு வருகின்றன. இதுபோன்ற பள்ளிகள் மீதுபெற்றோர், மாணவர்கள், நேரடியாக மாவட்ட கல்வி அலுவலகம்மற்றும் முதன்மை கல்வி அலுவலகத்தை அணுகி, புகார்தெரிவிக்கலாம். அவ்வாறு, பெறப்படும் புகார்கள் உண்மை என்றுஉறுதி செய்யப்பட்டால், துறை ரீதியான நடவடிக்கைமேற்கொள்ளப்படும்' என, அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக