நிகழாண்டில் 10 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.
கடந்த 2013-14 ஆம் ஆண்டில் 14 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. நிகழாண்டில் மாவட்ட கல்வித் துறை அதிகாரி, சுகாதாரத் துறை அதிகாரி, மாவட்ட நீதிபதி உள்ளிட்ட 10 ஆயிரம் பணியிடங்கள், குரூப் 1, 2, 4 பிரிவுகளில் தேர்வு மூலம் நிரப்பப்படும். இதற்கான தேர்வுக் கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக, மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி, இரண்டு நிமிஷங்கள் அமைதி அனுஷ்டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியம் தலைமையில் அதிகாரிகள்-ஊழியர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தேர்வாணையத்தின் செயலாளர் விஜயகுமார், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி வி.ஷோபனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக