லேபிள்கள்

27.1.15

சென்னைப் பல்கலை. தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சென்னைப் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை (ஜன.27)மாலை வெளியிடப்பட உள்ளன.இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி: 
சென்னைப் பல்கலைக்கழகம் சார்பில் கடந்த நவம்பரில் நடத்தப்பட்ட இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை மாலை வெளியிடப்பட உள்ளன. பல்கலைக்கழகத்தின் w‌w‌w.‌u‌n‌o‌m.ac.‌i‌n இணையதளம்மூலம் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். விடைத்தாள் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், புதன்கிழமை (ஜன.28) முதல் பல்கலைக்கழக இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு தாள் ஒன்றுக்கு ரூ. 750 கட்டணம் செலுத்த வேண்டும். இதுபோல் மதிப்பெண் மறு கூட்டலுக்கும் புதன்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கு தாள் ஒன்றுக்கு ரூ. 200 வீதம் கட்டணம் செலுத்த வேண்டும். ஆன்-லைனில் பூர்த்தி செய்து பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிப்ரவரி 3-ஆம் தேதிக்குள் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக