லேபிள்கள்

25.1.15

தொழில்பயிற்சி டிப்ளமோ படிப்புகள் வரும் கல்வியாண்டு முதல் அறிமுகம்

தமிழகத்தில், வரும் கல்வி யாண்டில், ஆறு பாலிடெக்னிக் கல்லூரிகளில்,தொழில் பயிற்சி டிப்ளமோ (வொகேஷனல் டிப்ளமோ) படிப்புகள் துவக்கப்பட உள்ளன.தேசிய திறன் மேம்பாட்டு ஆணையம் மூலம், தேசிய தொழிற் கல்வி தகுதி கட்டமைப்பு( என்.வி.இ.க்யூ.எப்.,) என்ற திட்டத்தை மத்திய அரசு துவக்கி உள்ளது. 

பள்ளிமுதல், கல்லூரி வரை, பல்வேறு துறைகளின் கீழ், தொழிற் பயிற்சிகள், சான்றிதழ்,டிப்ளமோ, பட்டம், முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்பு என, பல்வேறு நிலைகளில், தொழிற்பயிற்சி வழங்கப்படுகிறது. ஏற்கனவே, பாரதியார் பல்கலையில்,சமுதாய கல்லூரி வாயிலாக, தொழிற்கல்வி பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. இதற்கு, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் - ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி வழங்கி உள்ளது. தற்போது, தமிழகத்தில் உள்ள, பாலிடெக்னிக்களில், ஆறில், தொழிற்பயிற்சி டிப்ளமோ வழங்க, ஏ.ஐ.சி.டி.இ.,யும், தமிழக அரசின் தொழில்நுட்பகல்வி இயக்ககமும் அனுமதி வழங்கி உள்ளன. சேலம் - தியாகராஜர்; ராஜபாளையம், ராமசாமிராஜா; வல்லம் - பெரியார்; சென்னை - முருகப்பா; திருச்சி - ஸ்ரீசாய்; மதுரை - தமிழ்நாடு பாலிடெக்னிக் என, ஆறு பாலிடெக்னிக் கல்லூரிகளில், இப்படிப்பு துவக்கப்படுகிறது.

இதுகுறித்து, தொழில்நுட்ப கல்வி இயக்கக அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆறு பாலிடெக்னிக் கல்லூரிகளிலும், மூன்று ஆண்டு தொழிற்கல்வி டிப்ளமோ படிப்புகள்வழங்கப்படும். இதற்கு, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கான கட்டணத்தை கல்லூரிகளே நிர்ணயித்துக் கொள்ளும். இதற்கான பாடத்திட்டங்களை, ஏற்கனவே, ஏ.ஐ.சி.டி.இ., உருவாக்கி உள்ளது. வகுப்புகள் நடத்தப் படும் காலத்தை, சம்பந்தப்பட்ட கல்லூரிகளே நிர்ணயிக்கும். வெல்டிங், குளிர்பதன தொழில்நுட்பம், இயந்திர தொழில்நுட்பம் என பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த டிப்ளமோ படிப்புகள் நடத்தப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய பாடத்திட்டம்:

பாலிடெக்னிக் கல்லூரிகளில், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படுகிறது. புதிய பாடத்திட்ட குழுவின் 'கன்வீனர்' பேராசிரியர்வைரம் கூறியதாவது: பாலிடெக்னிக் கல்லூரிகளில் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. 

புதிய பாடத்திட்ட வடிவமைப்பு குழுவில், இன்ஜி., மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளை சேர்ந்த இரு பேராசிரியர்கள், தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் என, எட்டு பேர் அடங்கிய குழு ஈடுபட்டுள்ளது. மெக்கானிக்கல், புரடக் ஷன், ரெப்ரிஜிரேஷன் அண்ட் ஏர் கண்டிஷனிங் ஆகிய பாடங்களில், அதிக மாற்றங்கள் செய்யப்படுகின்றன. முதலாமாண்டு மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டிலிருந்தும், இரண்டாம் மற்றும் மூன்றாமாண்டு மாணவர்களுக்கு வரும்2016 - 17ம் கல்வியாண்டிலிருந்தும் புதிய பாடத்திட்டம் பயிற்றுவிக்கப்படவுள்ளது. இவ்வாறு, வைரம் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக