பத்தாம்வகுப்பு பொது தேர்வில் 100சதவீததேர்ச்சி பெற சுமாராக படிக்கும் மாணவர்களைவெளியேற்றிவிட்டு,பள்ளி ஆசிரியர்களேடுட்டோரியல் கல்லூரிக்கு பரிந்துரைக்கும்அவலம் தொடர்கிறது.
விருதுநகர் மாவட்டம் 10ம் வகுப்பு, பிளஸ்2அரசு பொது தேர்வுகளில் பல ஆண்டுகளாகமாநில அளவில் முதலிடம் பெற்றது. இருஆண்டுகளாக முதலிட தேர்ச்சியை தக்கவைக்க முடியவில்லை. வரும் பொது தேர்வில்நூறு சதவீத தேர்ச்சி பெற பொது தேர்வு எழுதும்மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்,ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டுபயிற்சிகளை பாட வாரியாக நடத்துகின்றனர்.தேர்ச்சி சதவீதம் குறையும் பள்ளி தலைமைஆசிரியர்கள், ஆசிரியர்கள் மீது நடவடிக்கைஎடுக்கப்படும் என அச்சுறுத்துகின்றனர். இதில்மிரளும் தலைமை ஆசிரியர்கள் நூறுசதவீதஇலக்கை எட்டுவதற்கு தடையாக உள்ளசுமாரான மாணவர்களை பள்ளியில் இருந்துவெளியேற்றுவதை சத்தம் இல்லாமல்செய்கின்றனர். இதற்காக மாணவர்களின்பெற்றோர்களை பள்ளிக்கு வரவழைத்துமூலைச்சலவை செய்கின்றனர்.
"உடல்நிலை சரியில்லை, வெளியூர்செல்கிறேன் என ஏதாவது ஒரு காரணத்தைகூறி கடிதம் எழுதி கடிதம் கொடுங்கள். டி.சி.,தருகிறோம். அருகில் உள்ள டுட்டோரியல்கல்லூரியில் சேர்ந்து படித்தால் ஒரேமுயற்சியில் பாஸ் செய்து விடுவார். அதன்பின்அடுத்த ஆண்டு பிளஸ் 1 வகுப்பில் விரும்பியபாடத்தில் சேர்ந்து படிக்க நல்ல வாய்ப்புகிட்டும்' என பெற்றோரிடம் பேசுகின்றனர். கூலிவேலை செய்யும் பெற்றோர் தலைமைஆசிரியரின் பேச்சை கேட்டு டி.சி., பெற்றுசெல்கின்றனர்.
சிவகாசி நகராட்சியில் உள்ள ஒரு பள்ளியில்10க்கு மேற்பட்ட மாணவர்களை வெளி யேற்றிஉள்ளனர். சிவகாசிக்கு அருகில் அரசுஉதவிபெறும் பள்ளியில் 4 மாணவிகள்வெளியேற்றப்பட்டுள்ளனர். வெளியேறும்மாணவர்கள் மனம் வெறுத்து படிப்பில் இருந்தேஒதுங்கும் மனநிலைக்கு செல்கின்றனர்.மாணவர்களை தேர்ச்சி பெற வைக்க தீவிரமுயற்சி எடுப்பதை விட்டு சிரமம் இன்றிநன்றாக படிக்கும் மாணவர்களை வகுப்பில்வைத்து தேர்ச்சி பெற வைத்து தப்பித்துகொள்ளாம் என பள்ளி ஆசிரியர்கள் நினைப்பதுமோசமான செயல். அரசு பள்ளி ஆசிரியரேதனியார் டுட்டோரியல் கல்லூரிக்கு சென்றுபடிக்க வையுங்கள் என கூறுவது கல்விதுறைக்கு அவமானமாக உள்ளது. பள்ளியில்இருந்து மாணவர்களை வெளியேற்றும்நடவடிக்கைக்கு மாவட்ட நிர்வாகம்நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் ஜெயக்குமார்,"" நூறு சதவீததேர்ச்சிக்காக எந்த மாணவரையும் பள்ளியில்இருந்து வெளியேற்ற கூடாது. பல மாதங்களாகதொடர்ச்சியாக பள்ளிக்கு வராத மாணவர்கள்மீதுதான் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். 10ம் வகுப்பு மாணவர்கள் பிப்ரவரி முதல்முறையாக படித்தாலே தேர்ச்சிபெற்றுவிடலாம். இதுபோன்றமாணவர்களுக்காகவே ஐந்து பாடங்களுக்கும்சி.டி.,கொடுத்துள்ளோம். படம் பார்த்துபடித்தாலே தேர்ச்சி ஆகி விடுவர். தேர்ச்சிசதவீதத்திற்காக மாணவர்களைவெளியேற்றினால் சம்மந்தப்பட்ட பள்ளிதலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கைஎடுக்கப்படும்,'' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக