அரசு உத்தரவை மீறி ஏப்ரல் மாதத்திற்கு முன்பு மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாதுஎன கோவையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மாணவர் சேர்க்கை
கோவை மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 2015-16-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை வருகிற ஏப்ரல் 4-ந் தேதிக்கு பிறகுதான் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்விஅதிகாரிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி தனியார் பள்ளிகளை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இந்தநிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருவதாகவும், மாணவர்களின் பெயரில் நன்கொடை பெற்றுக்கொண்டு,டோக்கன் வழங்கி வருவதாகவும் பெற்றோர்கள் கல்வி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து உள்ளனர்.
ஏழை மாணவர்களுக்கு பாதிப்பு
டோக்கன் பெற்றவர்கள் ஏப்ரல் மாதம் மாணவர்களை பள்ளியில் சேர்த்து கொள்ளலாம் என்று தனியார் பள்ளி நிர்வாகங்கள் கூறி வருவதாகவும், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு நன்கொடை தொகை உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் அனைத்து இடங்களையும் நிரப்பினால் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர உள்ள ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்தநிலையில் அரசு உத்தரவை மீறி கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஏப்ரல் மாதத்திற்கு முன்பு மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கோவை மாவட்ட மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் சந்திரனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
கடும் நடவடிக்கை
கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில், ஏப்ரல் மாதத்திற்கு முன்பு மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என்று அனைத்து தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கும் கல்விதுறை சார்பில் பொது சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அரசு உத்தரவை மீறி மாணவர் சேர்க்கை நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக