முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வில் பங்கேற்க சென்ற தனியார்பள்ளி ஆசிரியர்களுக்கு சில பள்ளி நிர்வாகங்கள் விடுமுறைவழங்கவில்லை. மீறி சென்றவர் களுக்கு பள்ளி நிர்வாகம் விளக் கம்கேட்டு ‘மெமோ’ வழங்கியுள் ளது. இதனால், இதுபோன்ற தேர்வுகளை
விடுமுறை நாட்களில் நடத்த வேண்டும் என முதுகலைப் பட்டதாரிஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்பணியிடங்களுக்கான தேர்வு கடந்த 10 ம் தேதி சனிக்கிழமைநடைபெற்றது. இதில், திருவள் ளூர் மாவட்டத்தில் 500 க்கும்மேற்பட்டவர்கள் இத்தேர்வு எழுதினர். சனிக்கிழமை இத்தேர்வுநடைபெற்றதால் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்விடுமுறை எடுத்து இத்தேர்வில் பங்கேற்றனர்.சில பள்ளிகளில்வேண்டு மென்றே அன்றைய தினம் பணிக்கு வரச் சொல்லிநிர்பந்தப்படுத்தியுள்ளனர். வராதவர்களுக்கு பள்ளி நிர்வாகம் ‘மெமோ’வழங்கியுள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சில தனியார் பள்ளி ஆசிரியர்கள்கூறியதாவது: சில பள்ளிகளில் அரை நாள் மட்டுமே விடுமுறைஅளித்தனர். இதனால், தேர்வு முடிந்ததும் அவசர அவசரமாகபள்ளிக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பெண் ஆசிரியர்கள்சிரமப்பட்டனர்.மேலும், சில பள்ளிகளில் அன்றைய தினம் வேலைக்குவராதவர்களிடம் விளக்கம் கேட்டு மெமோ வழங்கியுள்ளது. எனவே,இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க விடுமுறைநாட்களில்ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்த வேண்டும் என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக