பாலிடெக்னிக் வாரியத் தேர்வில் பழைய மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் மீண்டும் தேர்வு எழுதும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் ஆணைப்படி, வருகிற ஏப்ரல், அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட உள்ள பாலிடெக்னிக் வாரியத் தேர்வுகளில் பழைய மாணவர்கள் தேர்வு எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
2008-ஆம் ஆண்டுக்கு முன் 3 ஆண்டு பாலிடெக்னிக் படிப்பை மேற்கொண்டவர்களும், 2007-ஆம் ஆண்டுக்கு முன் 4 ஆண்டு பகுதி நேர பாலிடெக்னிக் படித்தவர்களும் மட்டுமே இந்த கருணை அடிப்படையிலான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.தமிழக அரசின் ஆணைப்படி, வருகிற ஏப்ரல், அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட உள்ள பாலிடெக்னிக் வாரியத் தேர்வுகளில் பழைய மாணவர்கள் தேர்வு எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் பாடம் ஒன்றுக்கு ரூ. 500 தேர்வுக் கட்டணமாகவும், மதிப்பெண் பட்டியலுக்கு ரூ. 30, பதிவுக் கட்டணமாக ரூ. 25 அவரவர்கள் படித்த கல்லூரி முதல்வர் மூலமாக செலுத்தி பதிவு செய்ய வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 17 கடைசித் தேதியாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக