தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள மருத்துவ மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நுழைவு தேர்வு அடுத்த மாதம் 1ம் தேதி நடக்கிறது.
தமிழகத்தில் உள்ள 12 அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்டி, எம்எஸ், எம்டிஎஸ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ மேற்படிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த 12 அரசு மருத்துவ கல்லூரிகளின் மூலம் இந்த ஆண்டு எம்டி, எம்எஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கு 1,100 இடங்களும், எம்டிஎஸ் படிப்பிற்கு 40 இடங்களும் நிரப்பப்படவுள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீடு போக மீதமுள்ள 595 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.
இதில், எம்டி, எம்எஸ் படிப்பில் சேருவதற்காக 8,600 பேரும், எம்டிஎஸ் படிப்பிற்காக 1,157 பேரும் என மொத்தம் 9,700 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான நுழைவு தேர்வு அடுத்த மாதம் 1ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக சென்னையில் 5 தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஏற்கனவே ஹால்டிக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக