முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 1,700-க்கும் அதிகமானோர் அடங்கிய தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் புதன்கிழமை வெளியிட்டது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான போட்டித்தேர்வு கடந்த ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 1,90,922 பேர் எழுதினர்.இந்தத் தேர்வு முடிவுகள் பிப்ரவரி 6-ஆம் தேதி வெளியிடப்பட்டன. போட்டித் தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 1:1 என்ற அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு விழுப்புரம், சேலம், மதுரை ஆகிய இடங்களில் பிப்ரவரி 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.போட்டித் தேர்வு மதிப்பெண், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு மதிப்பெண், பணி அனுபவத்துக்கான மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம்தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகியிருந்தால் அதிகபட்சமாக 4 மதிப்பெண்ணும், 5 ஆண்டுகளுக்கு அதிகமாக பணிஅனுபவம் இருந்தால் அதிகபட்சமாக 3 மதிப்பெண்ணும் வழங்கப்பட்டது.இதில் உடற்கல்வி இயக்குநர் அளவிலான 27 பணியிடங்களுக்கு மட்டும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக