லேபிள்கள்

27.2.15

பள்ளி மாணவர்களுக்கான ஆங்கிலத் திறன் தேர்வு: பிரிட்டிஷ் கவுன்சில் அறிமுகம்

பள்ளி மாணவர்களுக்கான "ஆப்டிஸ்' ஆங்கிலத் திறன் தேர்வை பிரிட்டிஷ் கவுன்சில்அறிமுகப்படுத்தியுள்ளது.இதுகுறித்து பிரிட்டிஷ் கவுன்சிலின் தென் இந்தியத் தேர்வுத் துறைத் தலைவர் டி.விஜயலட்சுமி
நிருபர்களிடம் வியாழக்கிழமை கூறியது:
13 முதல் 17 வயது வரையுள்ள மாணவர்களின் ஆங்கில மொழி பேச்சு, எழுதுதல், படித்தல், கவனித்தல் ஆகிய திறன்களை மதிப்பீடு செய்யும் வகையில் "ஆப்டிஸ்' தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது.

2 1/2 மணி நேரம் நடைபெறும் இந்தத் தேர்வினை இணையதளம் வழியாக மட்டுமே எழுத முடியும். ஆனால், இது தகுதித் தேர்வு கிடையாது.மாணவர்கள் படித்தல், எழுதுதல், பேசுதல் போன்ற எந்தத் திறனில் பின்தங்கியுள்ளனர் என்பதை கண்டறிய முடியும்.இந்தத் தேர்வினை பள்ளிகள் மூலமாக மட்டுமே எழுத முடியும். இதற்குக் கட்டணமும் வசூலிக்கப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக