என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள மாணவர்களின் தேர்வு முறை மற்றும்விடைத்தாள் மதிப்பீடு செய்யும் முறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர அண்ணாபல்கலைக்கழகம்பரிசீலித்து வருகிறது.
539 என்ஜினீயரிங் கல்லூரிகள்
தமிழ்நாட்டில் அண்ணாபல்கலைக்கழகக கட்டுப்பாட்டில் பல்கலைக்கழக கல்லூரிகள், அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் உள்பட 539 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன.இந்த கல்லூரிகளில் செமஸ்டர் முறையில் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றன. தேர்வுமுறையில் சீர்திருத்தம், விடைத்தாள் மதிப்பீடுசெய்வதில் சீர்திருத்தம் ஆகியவற்றை கொண்டுவர அண்ணாபல்கலைக்கழகம் பரிசீலித்தது. அதைத்தொடர்ந்து பல்வேறு நிபுணர்கள் அடங்கிய கமிட்டி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையை பல்கலைக்கழக அதிகாரிகள் ஆராய்ந்து பார்த்தனர்.
அந்த கமிட்டி பரிந்துரைத்த தகவல் வருமாறு:-
தேர்வு முறையில் மாற்றம்
*என்ஜினீயரிங் செமஸ்டர் தேர்வுமுறையில் மாற்றம் கொண்டுவருதல். தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் முறையில் மாற்றம் கொண்டுவருதல்.
* விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் சீர்திருத்தம் கொண்டுவருதல்.
*விடைத்தாள்களை மறு மதிப்பீடு செய்யும் முறையில் சீர்திருத்தம்.
*தேர்வின் போது ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவோருக்கு தண்டணை வழங்குதல்.மேற்கண்ட தேர்வு மற்றும் விடைத்தாள் மதிப்பீட்டில் சீர்திருத்தம் கொண்டுவருவது தொடர்பாக அண்ணாபல்கலைக்கழகம் பரிசீலித்து வருகிறது.இந்த பொருள்கள் வரக்கூடிய சிண்டிகேட் கூட்டத்தில் வைக்கப்பட்டு விவாதித்துமுடிவு எடுக்கப்படும் என்று அண்ணாபல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக