லேபிள்கள்

28.2.15

652 கணினி பயிற்றுநர் நியமனம்: சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கியது

தமிழகம் முழுவதும் 652 கணினி பயிற்றுநர்களை நியமிப்பதற்கானசான்றிதழ் சரிபார்ப்பு வெள்ளிக்கிழமை
தொடங்கியது.வேலூர், விழுப்புரம், சேலம், மதுரை ஆகிய 4 இடங்களில் வரும் திங்கள்கிழமை (மார்ச் 2) வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.
இந்தச் சான்றிதழ் சரிபார்ப்பில் தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட நாள்களில் வர இயலாதவர்கள் மார்ச் 2-ஆம் தேதி மீண்டும் பங்கேற்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அவ்வாறு வரும்போது, குறிப்பிட்ட நாளில் வர இயலாததற்கான காரணங்கள் மற்றும் அதற்கான ஆதாரங்களுடன் வர வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவின்படி, மாநில வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் 652 கணினி பயிற்றுநர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள எத்திராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும்,விழுப்புரத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், சேலத்தில் சாரதாபாலமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், மதுரையில் ஓ.சி.பி.எம். மேல்நிலைப் பள்ளியிலும் இந்த சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.இதற்கான அழைப்புக் கடிதங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக