லேபிள்கள்

29.5.15

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வில்தமிழக மாணவர்கள் 99.76% தேர்ச்சி

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புத் தேர்வில், தமிழக மாணவர்கள், 99.76 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்; சென்னை மண்டல அளவில், தேர்ச்சி அளவு, 99.03சதவீதமாக உள்ளது.சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புத் தேர்வுகள், மார்ச் 2ம் தேதி முதல், 26ம் தேதி வரை நடந்தன; நாடு முழுவதும், 13 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள், மே 27ம் தேதி வெளியாகும் என, அறிவிக்கப்பட்டது. ஒருநாள் தாமதமாகி, நேற்று வெளியிடப்பட்டது.

33 ஆயிரம் பேர்:தமிழகத்தில், 38 கேந்திரிய வித்யாலயா பள்ளி கள் உட்பட, மொத்தம், 431 பள்ளிகளைச் சேர்ந்த, 33,485 மாணவர்கள் தேர்வு எழுதி இருந்தனர்; இதில், 80 பேர் தவிர, 33,405 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மண்டல அளவில், மொத்தம், 1,42,076 பேர் தேர்வு எழுதினர்; இதில், 1,382 பேர் தவிர, 1,40,694 பேர் தேர்ச்சி பெற்றனர்.சென்னை மண்டலம் என்பது, தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கோவா, அந்தமான் - நிகோபர் தீவுகள், டையூ - டாமன், மகாராஷ்டிரா உள்ளடக்கி யது.சென்னையில் உள்ள, சி.பி.எஸ்.இ., மண்டல உதவி செயலர் சீனிவாசன், தேர்வு முடிவு விவரங்களை வெளியிட்டார்.

பின், நிருபர்களிடம் கூறியதாவது:மாணவர்கள் மதிப்பெண் அடிப்படையில், நான்கு விதமான, 'கிரேடு' தரப்படுகிறது. எத்தனை மாணவர், எந்த வகை கிரேடு பெற்றனர் என்ற விவரங்கள் தற்போது இல்லை; அந்தந்த பள்ளிகளில் கிடைக்கும்.
தகுதிச்சான்று, இரு வாரங்களில் கிடைக்கும்; தற்காலிக சான்று, இரு நாட்களில் வழங்கப்படும்.
உடனடி தேர்வு:தேர்ச்சி பெறாத மாணவர்கள், உடனடி தேர்வுக்கு விண்ணப்பிக்க லாம். இந்த தேர்வு, ஜூலை 16ம் தேதி துவங்கும்; ஜூன் 22ம் தேதி வரை, அபராதம் இன்றியும், அதன்பின், ஜூன் 30ம் தேதி வரை, ஒவ்வொரு நாளுக்கும், 10 ரூபாய் அபராதத்துடனும் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.'ரிசல்ட்' அறிய திணறல்தேர்வு முடிவுகளை, பகல் 2:00 மணிக்கு, சி.பி.எஸ்.இ., இயக்குனரகம் வெளியிட்டது.

ஆனால், இதுபற்றிய விவரங்களை, அறிவிக்கப்பட்ட எந்த இணைய முகவரியிலும் உடனடியாக பெற முடியவில்லை. எஸ்.எம்.எஸ்., மூலம், தேர்வு எண்ணை அனுப்பினால், அதிலும், விவரங்கள், தேர்வு முடிவுகள் கிடைக்கவில்லை. இன்டர்நெட் மையங்களுக்கு அலைந்து, பெற்றோர் திணறினர். 45 நிமிடங்களுக்கு பிறகே, விவரங்களை பெற முடிந்தது. அனைவரும் ஒரே நேரத்தில், விவரங்களை பெற முயன்றதால், இந்த குழப்பம் ஏற்பட்டதாக
கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக