லேபிள்கள்

26.5.15

மெயின் தேர்வில் மொழித்தாள் தேர்ச்சிக்கு புதிய முறை: ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வில் அதிரடி மாற்றம்- சர்ச்சைக்குரிய நுண்ணறிவு தாளில் தேர்ச்சி பெற்றால் போதும்

ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள் ளது. அதன்படி, சர்ச்சைக்குரிய நுண்ணறிவு தாளில் தேர்ச்சி பெற்றாலே போதும்.ஐஏஎஸ், ஐஎப்எஸ்,
ஐபிஎஸ், ஐஆர்எஸ் உட்பட மத்திய அர சின் 24 வகையான நேரடி உயர் பணிகளுக்காக சிவில் சர்வீசஸ் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படு கிறது. 
முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல் என 3 நிலைகளை உள்ளடக்கியதுஇந்த தேர்வு. முதல்நிலைத் தேர் வில் பொது அறிவு தாள், ‘சி-சாட்’ தாள் (நுண்ணறிவுத் தாள்) என்ற 2 தாள்கள் இருக்கும். ஒவ்வொன் றுக்கும் தலா 200 மதிப்பெண்.இந்த 2 தாள்களில் பெறும் மதிப்பெண் அடிப்படையில், ‘ஒரு காலியிடத்துக்கு 13 பேர்’ என்ற விகிதாச்சாரத்தின்படிதான் அடுத்த கட்ட தேர்வான மெயின் தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள். 

கடந்த 2011-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப் பட்ட சி-சாட் நுண்ணறிவுத்தாள், ஐஐடி, ஐஐஎம் மற்றும் ஆங்கிலப் புலமை மிக்க பட்டதாரிகளுக்கு எளிதாக இருப்பதாகவும், கிராமப் புற மாணவர்களுக்கு கடினமாக இருப்பதாகவும் சென்ற ஆண்டு தேசிய அளவில் குற்றச்சாட்டு எழுந்தது.பாதிக்கப்பட்ட மாணவர் கள், சி-சாட் தாளை நீக்க வேண்டும் என்று கூறி டெல்லியில் முற்றுகைப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து இதுகுறித்து ஆராய மத்திய அரசு நிபுணர் குழுவை அமைத்தது.இந்த நிலையில், இந்த ஆண்டு நடத்தப்படவுள்ள சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. 

அதன்படி, தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய சி-சாட் நுண்ணறிவுத்தாளில் குறைந்த பட்சம் 33 சதவீத மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இந்த தாளில் விண்ணப்பதாரர்கள் எடுக்கும் மதிப்பெண், மெயின் தேர்வு செல்வதற்கு கணக்கில்எடுத்துக்கொள்ளப்படாது.அதேபோல், மெயின் தேர்வில் மொழித் தாள்கள் தேர்ச்சியிலும் மாற்றம் செய்துள்ளனர். அதன்படி, தமிழ் உள்ளிட்ட முதலாவது மொழித் தாளிலும் 2-வது தாளான ஆங்கிலத்திலும் குறைந்தபட்சம் 25 சதவீத மதிப்பெண் எடுத்தாலே தேர்ச்சி பெற்றவர்களாக கருதப்படு வார்கள்.கடந்த ஆண்டு வரையில் தேர்ச்சிக்கு இவ்வளவு சதவீதம் என்பது நிர்ணயிக்கப்படாமல், குறிப்பிட்ட ஆண்டில் தேர்வெழுதும் மாணவர்களின் தகுதி நிலைக்கு ஏற்ப தேர்ச்சி மதிப்பெண் 40 சதவீதம், 45 சதவீதம் என்ற அள வில் நிர்ணயிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு முறை மாற்றம் குறித்து சென்னை சங்கர் ஐஏஎஸ் அகாடமி யின் நிர்வாக இயக்குநர் சங்கர் கூறும்போது, “முதல்நிலைத் தேர்வில் நுண்ணறிவுத்தாளில் தேர்ச்சி பெற்றாலே போதும் என்ற புதிய முறையால்கலை பட்டதாரிகள் குறிப்பாக கிராமப் புற மாணவர்கள் பெரிதும் பயன் பெறுவார்கள். 

சி-சாட் தாள் மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாததால்கிராமப்புற மாணவர்கள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் சமமான போட்டி ஏற்படும்” என்றார்.சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகி வரும் தூத்துக்குடியைச் சேர்ந்த ராமச்சந்திரன் கூறும்போது, “முதல்நிலைத் தேர்வில் சி-சாட் தாள் மதிப்பெண்மெயின் தேர்வு செல்வதற்கு எடுத்துக்கொள்ளப்படாது, மெயின் தேர்வில் தமிழ் உள்ளிட்ட மொழித் தாளுக்கும் ஆங்கில தாளுக்கும் குறைந்தபட்சம் 25 சதவீத மதிப் பெண் எடுத்தாலே போதும் என்ற புதிய நடைமுறையால் கிராமப்புற மாணவர்கள்பெரிதும் பயன்பெறுவர். மெயின் தேர்வில் கட்டுரை, பொது அறிவுத் தாள் களை நன்கு எழுதிய போதும், ஆங்கில தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் பெறாததால் மெயின் தேர்வில் தேர்ச்சி வாய்ப்பை இழந்தவர்கள் ஏராளம்” என்றார்.இந்த ஆண்டு சிவில் சர்வீசஸ் பணிகளில் 1,129 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான முதல்நிலைத் தேர்வு ஆகஸ்ட் 23-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கு ஜூன் 19-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.upsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள் ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக