லேபிள்கள்

30.5.15

இன்ஜி., படிக்க 1.50 லட்சம் பேர் விண்ணப்பம்! எல்லாருக்கும் ' சீட்' கிடைக்கும்

அண்ணா பல்கலைக்குட்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில் சேர, 1.50 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. 2 லட்சம் இடங்கள் இருப்பதால், விண்ணப்பித்த அனைவருக்கும், 'சீட்' கிடைக்கும். அண்ணா பல்கலைக்குட்பட்ட, 580 இன்ஜி., கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கவுன்சிலிங், அண்ணா பல்கலையில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்று, கல்லுாரியில் சேர, மே, 6ம் தேதி முதல், அண்ணா பல்கலை உட்பட தமிழகம் முழுவதும், 60 மையங்களில் விண்ணப்பங்கள் விற்கப்பட்டன.

மே, 27ம் தேதியுடன், 59 மையங்களில் விண்ணப்ப விற்பனை முடிந்தது. நேற்று மாலை, 5:00 மணியுடன் அண்ணா பல்கலையிலும் விண்ணப்ப விற்பனை முடிந்தது. நேற்று மாலை, கடைசி நேர நிலவரப்படி, அச்சடிக்கப்பட்ட, 2.40 லட்சம் விண்ணப்பங்களில், 1.90 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.இதேபோல், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு, நேற்று மாலை, 5:00 மணியுடன் முடிந்தது. 1.40 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக, தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கை செயலரும், அண்ணா பல்கலை பேராசிரியருமான ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.

நேற்று கடைசி நாளில், தபாலில் அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் இன்றும், நாளையும் வரும் நிலையில், அவற்றையும் அண்ணா பல்கலை ஏற்றுக் கொள்ளும் என்று அவர் கூறினார். நேற்று முன்தினம் மட்டும் தபாலில், 15 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதால், நாளைக்குள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த ஆண்டு, அண்ணா பல்கலை கவுன்சிலிங் வழியிலான மாணவர் சேர்க்கைக்கு, இரண்டு லட்சம் விண்ணப்பங்கள் விற்பனையாகின. 1.75 லட்சம் விண்ணப்பங்கள் வந்தன. மொத்தமுள்ள, இரண்டு லட்சத்து, 5,000 இடங்களில், கடந்த ஆண்டு, 40 ஆயிரம் இடங்கள் காலியாக
இருந்தன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக