லேபிள்கள்

27.5.15

தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் தரவரிசை பட்டியல்

தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் நேற்று ெவளியிட்டுள்ளது.
 

தமிழகத்தில் 2015-16ம் கல்வியாண்டிற்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த 6ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 59 மையங்களில் இன்றுடனும், அண்ணா பல்கலைக்கழகத்தில் வரும் 29ம் தேதியுடனும் விண்ணப்ப விநியோகம் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து, 29ம் தேதி மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரடியாகவோ, தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.  விளையாட்டு பிரிவின் கீழ் விண்ணப்பிப்பவர்கள் மட்டும் நேரடியாக விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும். 

இது வரை 1 லட்சத்து 85 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளது. 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. ஜூன் மாதம் 15ம் தேதி ரேண்டம் எண்ணும், 19ம் தேதி ரேங்க் பட்டியலும் வெளியிடப்படும்.  ஜூலை 1 ம் தேதி பொது பிரிவுக்கான கவுன்சலிங்கும் நடைபெறும். 30 நாட்கள் தொடர்ச்சியாக கவுன்சலிங் (ஜூலை 31 வரை) நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் எந்த படிப்பை தேர்வு செய்யலாம், எந்த கல்லூரியில் தாங்கள் விரும்பும் படிப்புகள் உள்ளன என்பதை ஆராய்ந்து வருகின்றனர். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 2014 ஏப்ரல்-மே மாதம் மற்றும் நவம்பர்-டிசம்பர்  மாதங்களில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் கல்லூரிகள் தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டுள்ளது. 

அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில், ஏப்ரல்-மே மற்றும் நவம்பர்-டிசம்பர் மாத தேர்வுகளின் படி இரண்டு பிரிவுகளாக இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளின் பெயர்களும் தரவரிசை படி கொடுக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக இணையதளமான www.annauniv.edu பார்த்து கல்லூரிகளின் தரவரிசையை தெரிந்து கொள்ளலாம். இது குறித்து அண்ணாபல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், “சென்னை ஐகோர்ட் உத்தரவின் பேரில், அண்ணா பல்கலைக்கழகம் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. பொறியியல் மாணவர் சேர்க்கை நடைபெற்று கொண்டிருக்கும் இந்த வேளையில் மாணவர்கள் சிறந்த கல்லூரியை ேதர்வு செய்வதற்கு இந்த பட்டியல் பெரிதும் உதவும். அதேபோல, கல்லூரிகளில் தரவரிசை பட்டியலும், அந்தந்த கல்லூரிகளுக்கான கவுன்சலிங் கோட் எண்ணையும் வெளியிட்டிருப்பது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’’ என்றார்.

டாப் 10 கல்லூரிகள்

அண்ணா பல்கலைக்கழகம், மாணவர் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள 328 கல்லூரிகளின் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களை பெற்ற கல்லூரிகள். ஏப்ரல்-மே அடிப்படையில்... தூத்துக்குடி நேஷனல் பொறியியல் கல்லூரி, கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி, கோவை டாக்டர் மஹாலிங்கம் பொறியியல் கல்லூரி, கோவை ஸ்ரீகிருஷ்ணா டெக்னாலஜி கல்லூரி,  காஞ்சிபுரம் சாய்ராம் பொறியியல் கல்லூரி, திருவள்ளூர் ஆர்எம்கே பொறியியல் மற்றும் டெக்னாலஜி கல்லூரி, காஞ்சிபுரம் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி, விருதுநகர் ராம்கோ இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி, காஞ்சிபுரம் ஸ்ரீசிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரி, மத்திய எலக்ட்ரோ கெமிக்கல் ஆராய்ச்சி நிறுவனம் சிவகங்கை. 

நவம்பர்-டிசம்பர் அடிப்படையில்... 

கோவை பிஎஸ்ஜி இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி, காஞ்சிபுரம் ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி, காஞ்சிபுரம் ஸ்ரீசாய்ராம் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி,  தூத்துக்குடி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி, விருதுநகர் ராம்கோ இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி, காஞ்சிபுரம் ஸ்ரீசிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரி, காஞ்சிபுரம் பிரின்ஸ் ஸ்ரீவெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரி, கன்னியாகுமரி வின்ஸ் பெண்கள் கிறிஸ்தவ பொறியியல் கல்லூரி, வேலூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி, சென்னை மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக