லேபிள்கள்

24.5.15

தலைமை ஆசிரியர், முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு 'மெமோ'

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வித்துறை இணை இயக்குனர்கள் ஆய்வு நடத்த உள்ளனர்.
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தி முடிக்க இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களுக்கு தலா ஒரு கல்வித்துறை இணை இயக்குனர் நியமிக்கப்பட்டார். 
இவர்கள், அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க ஆலோசனைகளை வழங்கினர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு மே21ல் வெளியானது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பெரும்பாலான பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. சில பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைந்ததால், மாவட்டத்தின்ஒட்டுமொத்த தேர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டது. இதற்கான காரணம் அறிய தலைமை ஆசிரியர், கல்வித்துறை அதிகாரிகளிடம் விசாரிக்க இணை இயக்குனர்களுக்கு, தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, தேர்வு பொறுப்பாளர்களாக (நோடல் ஆபீசர்) செயல்பட்ட இணை இயக்குனர்கள் ஆய்வு நடத்தி விசாரிக்க உள்ளனர். இதற்கிடையே தலைமை ஆசிரியர், முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு 'மெமோ' அனுப்பி உள்ளனர். இந்நடவடிக்கை ஆசிரியர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக