லேபிள்கள்

26.5.15

தொடக்க கல்வி துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் ஒரே அமைப்பு நமது தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு - ராஜ்மோகன், திண்டுக்கல் மாவட்ட இணைச்செயலாளர்.

பட்டதாரி ஆசிரியர் நண்பர்களே:

நமது  TNGTF பொதுசெயலாளர் 4/5/15 அன்று தொ.க.இயக்குனரிடம் திண்டுக்கல் மாவட்டத்தில் போலி மாறுதல் ஆணை பெற்ற வழக்கில் பாதிப்படைத்த பட்டதாரி ஆசிரியர்களின் மீது நிலுவையில் உள்ள குற்ற குறிப்பாணையை முடிவுக்கு கொண்டு வருமாறு வலியுறுத்தினார். 


அதனை தொடர்ந்து ந.க.எண்.11633/E/15 dt.9.5.15 மூலம் விபரம் தெரிவிக்க தொ.க.இயக்குனர் உத்தரவிட்டார். 11/5/15 அன்று இயக்குனரிடம் மீண்டும் வலியுறுத்தினார்.

 இதனால் Jd மேற்பார்வையில் குற்ற குறிப்பானையை விரைவில்   முடிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தொ.க.இயக்குனர் கூறியுள்ளார். 

நமது அமைப்பில் இல்லாதவர்களுக்கும்., பட்டதாரி ஆசிரியர்கள் என்ற ஒரே காரணத்திற்காக பொதுசெயலாளர் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையை TNGTF DGL சார்பாக அனைவரும் பாராட்டுவோம்.
     
     ராஜ்மோகன் : திண்டுக்கல் மாவட்ட இணைச்செயலாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக