தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், குரூப் - 1 முதன்மைத் தேர்வு, ஜூன், 5, 6, 7ம் தேதிகளில், சென்னையில் நடக்கும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில், துணை ஆட்சியர், போலீஸ் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் பதவிகளில், காலியாக உள்ள, 79 இடங்களை நிரப்ப, முதல்நிலைத் தேர்வு, 2014 ஜூலை 20ம் தேதி நடந்தது; இதன் முடிவுகள், ஜன., 30ம் தேதி வெளியானது.
இதில், அடுத்தகட்ட முதன்மை எழுத்துத் தேர்வுக்கு, 4,000 பேர் தேர்வு பெற்றனர்.
முதன்மை தேர்வு குறித்த முறையான அறிவிப்பை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:குரூப் - 1 முதன்மை தேர்வு, ஜூன் 5, 6 மற்றும் 7ம் தேதிகளில், சென்னை தேர்வு மையங்களில் நடத்தப்படும். தேர்வுக்கு அனுமதிக்கப்
பட்டோரின், 'ஹால் டிக்கெட்', தேர்வாணைய இணையதளத்தில்வெளியிடப்பட்டு உள்ளது. சந்தேகமிருப்பின், contacttnpsc@gmail.com என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.மேலும், 1800 425 1002 என்ற, கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்து உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக