1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கையின் போது, பிறப்பு சான்றிதழில் உள்ள பிறந்த தேதியையே பள்ளி பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டு
உள்ளது.மாணவர் சேர்க்கைதமிழகத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பிறகு வருகிற ஜூன் 1-ந் தேதி திறக்கப்பட உள்ளது.
இதற்கிடையில் 1-ம் வகுப்பில் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதற்காக மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக விண்ணப்பம் வழங்கப்பட்டு, உடனுக்குடன் நேரடி மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களை சேர்க்கும் பணியில்தலைமை ஆசிரியர் தலைமையில் ஆசிரியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.பொதுமக்களுக்கு விழிப்புணர்வுபுறநகர் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வழக்கம் போல் நடைபெற்று வருகிறது. ஆனாலும் நகர்புறத்தில் உள்ள அரசுபள்ளிகளில் மாணவர் சேர்க்கை சற்று மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மாறாக தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்ப்பதற்கே பெரும்பாலான பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.இந்த நிலையில் இந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் உள்ள சுமார் 350 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டு உள்ளது. அந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கையைஅதிகரிக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
பிறந்த தேதி
மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் பள்ளிகளில், மாணவ-மாணவிகளின் பிறப்பு சான்றிதழில் உள்ள பிறந்த தேதியையே, பள்ளி பதிவேட்டிலும் குறிப்பிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தொடக்க கல்வி இயக்குனரகம், அனைத்து மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தும் போது, பிறப்பு சான்றிதழ் உள்ள மாணவ-மாணவிகளை மட்டுமே சேர்க்க வேண்டும். பள்ளி பதிவேடுகளில்மாணவர்களின் பிறப்பு சான்றிதழில் குறிப்பிட்டுள்ள பிறந்த தேதியையே பதிவு செய்ய வேண்டும்.
தவிர்க்க வேண்டும்
சில இடங்களில் பிறப்பு சான்றிதழை சரிபார்க்காமலே, பெற்றோர்கள் கூறும் பிறந்த தேதியையே பதிவு செய்து மாணவர் சேர்க்கை நடத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. தவிர்க்கப்பட வேண்டியது. இந்த ஆண்டு நடைபெறும் மாணவர் சேர்க்கையின் போது, இந்த தவறுகள் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். இது உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மற்றும் தொடக்க கல்வி அலுவலர்கள் மூலமாக சரிபார்க்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக