மூன்று ஆண்டுகளுக்கு மேல், ஆண்டறிக்கை தாக்கல் செய்யாத, 615 சங்கங்களை அதற்கான பதிவு பட்டியலில் இருந்து நீக்குவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.
தமிழகத்தில், கல்வி, கலை, சமூக மேம்பாடு போன்ற காரணங்களுக்காக துவங்கப்படும் சங்கங் கள் மற்றும் மன்றங்கள் அனைத்தும், 1975ம் ஆண்டு சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட வேண்டும்.
இதன்படி, தமிழகத்தில், தற்போதைய நிலவரப்படி, 1.52 லட்சம் சங்கங்கள் உள்ளன. இதில், ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட சங்கங்கள், உரிய கால இடைவெளியில் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்யாமல் உள்ளன.இது போன்று, நிதி நிர்வாகம் குறித்த ஆண்டு அறிக்கை தாக்கல் செய்யாத சங்கங்கள்மீது பதிவுத்துறை உரியநடவடிக்கை எடுப்பதில்லை என்று புகார் கூறப்படுகிறது.இந்நிலையில், பதிவு மாவட்டம் வாரியாக, ஆண்டு அறிக்கை தாக்கல் செய்யாத சங்கங்கள் குறித்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இதில் தெரிய வரும் சங்கங்களின் பெயர்களை பதிவேட்டில் இருந்து நீக்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வகையில் பெரிய குளம் பதிவு மாவட்டத் தில், 1988 - 94 வரை பதிவு செய்யப்பட்ட சங்கங்க ளின் நிலவரம் ஆய்வு செய்யப்பட்டது. இதில், ஆண்டு அறிக்கைதாக்கல் செய்யாதது குறித்து நினைவூட்டல் கடிதம் அனுப்பியும், மூன்று ஆண்டுகளுக்கு மேல் அறிக்கை தாக்கல் செய்யாத, 615 சங்கங்களின் பெயர்களை பதிவு ஏட்டில் இருந்து நீக்க பதிவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.இது குறித்த அறிவிப்பு, அரசிதழில் வெளியாகி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக