தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, விண்ணப்பித்தோருக்கான, 'ரேண்டம் எண்' இன்று வெளியிடப்படுகிறது.
தமிழகத்தில், ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரியையும் சேர்த்து, 20 அரசு மருத்துவ கல்லுாரிகள், ஒரு அரசு பல் மருத்துவ கல்லுாரி உள்ளன. 2,655 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 100 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன.
அகில இந்திய ஒதுக்கீடாக, 15 சதவீத இடங்கள் போக, மற்ற இடங்களுக்கு, மருத்துவக் கல்வி இயக்ககம், கலந்தாய்வு நடத்தி மாணவரை சேர்க்க உள்ளது. இதற்கு, 32,184 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், 'ரேண்டம் எண்' இன்று வெளியிடப்படுகிறது. பலர் ஒரே மாதிரியான, 'கட் - ஆப்', பிறந்த தேதி, பாடவாரியாக மதிப்பெண் என, எல்லாம் ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்புண்டு. அப்படியான சூழலில், அவர்களில், யாரை முன்னிலைப்படுத்துவது என்பதற்கான, 'ரேண்டம்' எண், இன்று வெளியிடப்படுகிறது.பிளஸ் 2 மறு கூட்டலுக்கான முடிவுகள் குறித்த, 'சிடி' இன்று, பள்ளிக் கல்வித் துறை தர உள்ளது. இதைத் தொடர்ந்து, 14ம் தேதி, தர வரிசை பட்டியலை வெளியிடவும், 19ம் தேதி, முதற்கட்ட கலந்தாய்வை நடத்தவும், மருத்துவக் கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக