அரசு பள்ளிகளில் பராமரிப்பு தொகை மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிதிஎன்றபெயரில் கட்டாய வசூல் வேட்டை நடத்துகின்றனர். ஆனால் 'நன்கொடை வசூலிக்கக் கூடாது' என பள்ளிக்கல்வி இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.புதிய கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
அரசு பள்ளியைப் பொறுத்தவரை ஆங்கில வழி வகுப்புக்கு மட்டும் சிறிய அளவில் 500 ரூபாய்க்குள் பயிற்சி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இதில் எந்த வகுப்புக்கு எவ்வளவு கட்டணம் என்று பள்ளிகளில் அறிவிக்கவில்லை. தமிழ்வழி வகுப்புக்கு எந்தக் கட்டணமும் கிடையாது.ஆனால் பல அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 500 ரூபாயில் துவங்கி 4000 ரூபாய் வரை மாணவ மாணவியரிடம் கட்டாய வசூல் செய்யப்படுகிறது. இதில் 'பெற்றோர் - ஆசிரியர் கழக நன்கொடை' என்ற பெயரில் 50 ரூபாய்க்கு மட்டும் ரசீது தரப்படுகிறது.
சில பள்ளிகளில் பெற்றோர் - ஆசிரியர் கழக நிதியாக பல ஆயிரம் ரூபாய் வசூலிப்பதும் நடக்கிறது.எந்த உத்தரவும் இல்லாமல் வசூல் செய்வது குறித்து பெற்றோர் பள்ளிகளில் கேட்டால் 'புத்தகம் சீருடை காலணி ஜியோமெட்ரி பாக்ஸ் போன்றவற்றை நாங்கள் தானே இலவசமாக பெற்றுத் தருகிறோம். அதைக் கொண்டு வர போக்குவரத்து செலவுக்குவேண்டாமா?' என்று கோபமான பதில் வரும் சூழல் உள்ளது.
இதனால் சாதாரண கூலித் தொழிலாளி கணவனை இழந்து குடும்பம் நடத்தும் பெண்கள் ஏழைக் குடும்ப பெற்றோர் பணம் கட்ட முடியாமல் பாதிக்கப்படுகின்றனர்.இதுகுறித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவரிடம் கேட்டபோது 'மாணவர்களிடம் இருந்து பெறும் நிதியில் தான் உட்கட்டமைப்பை சிறப்பாக வைக்க முடிகிறது. பள்ளியின் பராமரிப்புக்காக தான் இந்த தொகையை வாங்குகிறோம்' என தெரிவித்தார்.
இதற்கிடையில் பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் 'அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில்பெற்றோரிடம் கட்டாய நன்கொடை வசூலிப்பதாக புகார்கள் வந்துள்ளன. எந்த பள்ளியிலும் கட்டாய வசூல் நடத்தக் கூடாது. இந்த புகார்கள் வராமல் ஆசிரியர்கள் விழிப்புடன் நடந்து கொள்ள வேண்டும்' என எச்சரித்து உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக