தமிழகத்தில் கால்நடை மருத்துவ பட்டப் படிப்புகளில் நிகழ் கல்வி ஆண்டில் (2015-16) மாணவர்கள் சேருவதற்கு நிறைவு செய்த விண்ணப்பத்தை அளிக்க புதன்கிழமை (ஜூன் 10) கடைசி நாளாகும்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பம், சென்னை மாதவரத்தில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு புதன்கிழமை மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக சேர்க்கை குழு (இளநிலை படிப்புகள்) தலைவர் மா.திருநாவுக்கரசு தெரிவித்தார்.
340 இடங்களுக்கு...
பி.வி.எஸ்சி. உள்ளிட்ட கால்நடை மருத்துவ பட்டப் படிப்புகளில் மொத்தம் உள்ள 340 இடங்களுக்கு இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்பியுள்ளனர். பி.வி.எஸ்சி. அண்ட் ஏஎச் (கால்நடை மருத்துவப் படிப்பு), பி.டெக். (உணவுத் தொழில்நுட்பம்), பி.டெக். (பால்வளத் தொழில்நுட்பம்), பி.டெக். (கோழியின உற்பத்தி தொழில்நுட்பம்) ஆகிய படிப்புகளில் சேர மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். குறிப்பாக பி.வி.எஸ்சி (கால்நடை மருத்துவம்) படிப்பில் சேர ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த ஆண்டு முதன்முறையாக ஆன்லைன் மூலம் மட்டுமே மாணவர்கள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யும் முறையை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்தது. ஆன்லைன் மூலம் மொத்தம் 16,929 மாணவர்கள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துள்ளனர் என்றார் திருநாவுக்கரசு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக