பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வின் அறிவியல் செய்முறைத் தேர்வு ஜுன் 18,19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்தி:
கடந்த மார்ச் 2015-இல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதி, அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், அறிவியல் பாட பயிற்சி வகுப்புக்கு வருகை புரிந்து ஆனால் செய்முறைத் தேர்வில் கலந்துகொள்ளத் தவறிய பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் ஆகியோருக்கு வரும் ஜூன் 18,19-ஆம் தேதிகளில் சிறப்புத் துணைத் தேர்வின் அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடைபெறும்.
இதுகுறித்த முழு விவரங்களையும் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரை நேரில் அணுகி பெற்றுக்கொள்ள மாணவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக