சத்துணவு சாப்பிடும் முன், மாணவர்கள் கை கழுவ வசதியாக, கட்டாயம் சோப்பு வாங்கி வைக்கவும், சாப்பிடுவதற்கு துருப்பிடிக்காத, ஸ்டீல் தட்டுகள் வாங்கி வைக்கவும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் மதிய உணவுத் திட்டம் மற்றும் தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்தில்,
தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 10ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தை முறையாகச் செயல்படுத்தி, சுவை மற்றும் சுகாதாரம் நிறைந்த உணவு வழங்க, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் பல்வேறு விதிகளை ஏற்படுத்தியுள்ளது. இவை, சரியாகப் பின்பற்றப்படுகின்றனவா என, நாடு முழுவதும் களஆய்வுகளையும் நடத்தி உள்ளது.
இதில், துருப்பிடிக்காத தட்டுகள் பல பள்ளிகளில் இல்லை என்றும், மாணவர்கள் விளையாடியதால் ஏற்பட்ட கறைகளையும், பேனா, பென்சில் மற்றும் சாக்பீஸ் கறை படிந்தும் உள்ள கைகளை, சாப்பிடும் முன் கழுவ, 'சோப்பு' மற்றும் தண்ணீர் வசதி இல்லை என்றும் கண்டறிந்துள்ளது.
இதுகுறித்து, அனைத்து மாநிலப் பள்ளிகளுக்கும் மத்திய அமைச்சகம் பல்வேறு உத்தரவுகளை வழங்கியுள்ளது.
அதன் விவரம்:நாடு முழுவதும், 304 மாவட்டங்களில் உள்ள, 11,663 பள்ளிகளில், 38 நிறுவனங்கள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது.மாணவர்கள் சாப்பிடும்போது ஜாதி, மத ரீதியான பாகுபாடுகள் காணப்படவில்லை.பல இடங்களில் பரிமாறப்பட்ட உணவு சூடாக இல்லாமல், குளிர்ந்த நிலையில் இருந்தன.
உணவு வைப்பதற்கு பள்ளிகளில் துருப்பிடிக்காத, சில்வர் தட்டுகள் இல்லாததால்,மாணவர்கள்சாப்பாடு வாங்க சிரமப்பட்டனர்.சாப்பிடும் முன் அவர்கள் கைகளை சுத்தமாகக் கழுவ, சோப்பு வசதி செய்யப்படவில்லை.
பல பள்ளிகளில், உணவுப் பொருட்கள் கிடங்குடன் கூடிய சமையலறை கட்டடம் இல்லை.மத்திய அரசின் நிதியில் பயன்படுத்தாத நிதிமூலம் சில்வர் தட்டுகள், சோப்பு வாங்கி வைத்து மாணவர்களுக்கு கட்டாயம் வழங்க வேண்டும்; சூடான சாப்பாடு பரிமாற வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக