லேபிள்கள்

16.9.15

அக்டோபர் 8 வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அழைப்பு!!

*****************************************
அன்பான பட்டதாரி ஆசிரியப் பெருமக்களே.      
******************************************

>CPS ஐ கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல்!


> 2004-2006 தொகுப்பூதிய காலத்திற்கு காலமுறை ஊதியம் வேண்டுதல்'

உள்ளிட்ட நம்முடைய நியாமான 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இதுவரை மூன்று அறவழி போராட்டங்களை நடத்தியும் இந்த அரசு பேச்சுவார்த்தைக்கு கூLஅழைக்காது நம்மை வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தள்ளி இருக்கிறது. 

எனவே இந்த அரசு நம்மை திரும்பிப் பார்க்க, நமது கோரிக்கைகள் நிறைவேற அனைவரும் அக் - 8 வேலை நிறுத்தத்திற்கு தயாராகுங்கள்.

20.9.15 அன்று மாவட்ட தலைநகரில் நடைபெறும்  ஆயத்த மாநாட்டில் நமது இயக்க மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளுங்கள்.

அக்டோபர் 8 ல் நடைபெறும் வேலைநிறுத்த போராட்டத்தில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களையும் கலந்து கொள்ள செய்யுங்கள்.

கோரிக்கையை வென்றெடுக்க வேலைநிறுத்த போராட்டத்திற்கு தயாராவோம் !!!

 - தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு.
மாநில அமைப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக