தமிழகத்தில் 28 மாவட்டங்களில் சமுதாயக் கல்லூரிகளை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் விரைவில் தொடங்க உள்ளது என அதன் துணைவேந்தர் சந்திரகாந்தா ஜெயபாலன் கூறினார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டி: தமிழக அரசு சட்டப் பேரவையில் அறிவித்தபடி, மதுரை, திருச்சி, கோவை, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் 4 மண்டல மையங்களையும், உறுப்பு சமுதாயக் கல்லூரிகளையும் பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது.
இந்தச் சமுதாயக் கல்லூரிகள் மூலம் பல்வேறு படிப்புகளையும், தொழில் சார்ந்த படிப்புகளும் வழங்கப்படுவதோடு, மாணவர்களுக்கு நேரடிப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
இதுபோல் மேலும் 28 மாவட்டங்களிலும் புதிதாக சமுதாயக் கல்லூரிகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், மதுரையில் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துக்கு வளாகம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு 4.30 ஏக்கர் நிலத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் ஒதுக்கியுள்ளார். விரைவில் கட்டடங்கள் கட்டப்படும்.
மேலும், பல்கலைக்கழகத்தின் 8-ஆவது பட்டமளிப்பு விழா சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் அக்டோபர் 10-ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழக ஆளுநர் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் யுஜிசி துணைத் தலைவர் ஹெச். தேவராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக