லேபிள்கள்

18.9.15

கலை விழாவில் கலக்கலாம்: மாணவர்களுக்கு வாய்ப்பு

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு கலை விழா (கலா உற்சவ்) போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தியா முழுவதும், அழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகளை பாதுகாக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. போட்டிகள்இதற்காக, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு கலை விழா போட்டிகள் நடத்தப்பட உள்ளன. 

இந்தப் போட்டிகள் இசை, நடனம், நாடகம், காண் கலை (விஷுவல் ஆர்ட்) ஆகிய நான்கு பிரிவுகளில் நடத்தப்படும். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம்.

முதற்கட்டமாக, கல்வி மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு, நான்கு பிரிவுகளிலும் தலா ஒருவர் தேர்வு செய்யப்படுவர்.  பின், வருவாய் மாவட்டம், மாநிலம், தேசிய அளவில் போட்டிகள் நடத்தப்படும். 

தேசிய அளவில் வெற்றி பெறுபவருக்கு, ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசாக தலா, 1 லட்சத்து 25 ஆயிரம்; இரண்டாம் பரிசாக தலா, 75 ஆயிரம்; மூன்றாம் பரிசாக தலா, 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.  

இதுகுறித்து, திண்டுக் கல் முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி கூறியதாவது: 

மாநில அளவில்அவரவர் பகுதிகளில் உள்ள கலைகளில் ஏதாவது ஒன்றை செய்து காண்பிக்க வேண்டும். அக்டோபரில், கல்வி மாவட்டம் மற்றும் வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்படும். இதைத் தொடர்ந்து, சென்னையில் நவம்பர் மாதம், மாநில அளவிலான போட்டிகளும், டில்லியில் டிசம்பர் மாதம், தேசிய அளவிலான போட்டிகளும் நடத்தப்படும். கலை விழா போட்டிகள் அனைத்தும், 'வீடியோ' எடுக்கப்பட்டு, 'இ புராஜக்ட்' ஆக மாற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக