லேபிள்கள்

17.9.15

மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு

மதுரை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு உத்தரவுகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
மதுரை மாநகராட்சியில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தொடக்க, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் நடந்த கலந்தாய்வில் 105 ஆசிரியர்கள் பங்கேற்றனர். இதில் 4 முதுநிலைப் பட்டதாரி, உயர்நிலைப் பட்டதாரி தலைமை ஆசிரியர், 7 பட்டதாரி ஆசிரியர்கள், 5 தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், 10 இடைநிலை ஆசிரியர்கள் என 27 பேருக்கு பணியிட மாறுதல் உத்தரவுகளை மேயர் வி. ராஜன் செல்லப்பா வழங்கினார்.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 7, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 2, உடற்கல்வி இயக்குநர்கள் 2, பட்டதாரி ஆசிரியர்கள் 6, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 3 என 21 பேருக்கு பதவி உயர்வு உத்தரவையும் மேயர் வழங்கினார்.  கலந்தாய்வுக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பொறுப்பு செ.சாந்தி, கல்வி அலுவலர் நடராஜன், கல்விக்குழுத் தலைவர் சுகந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக