பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, மருத்துவம் சார் பட்டப் படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங் துவங்கி உள்ளது.
பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட மருத்துவம் சார் படிப்புகளுக்கான, இரண்டாம் கட்டகவுன்சிலிங், சென்னை ஓமந்துாரார் அரசுக் கல்லுாரியில், நேற்று முன்தினம் துவங்கியது.
சுயநிதி கல்லுாரிகளில், 3,285 இடங்கள் இருந்தன. நேற்று முன்தினம் நடந்த கலந்தாய்வில், 275 இடங்கள் மட்டுமே நிரம்பின; மீதம், 3,010 இடங்கள் காலியாக இருக்கின்றன. வரும் 19ம் தேதி வரை, கவுன்சிலிங் நடக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக