பள்ளிக் குழந்தைகளுக்கு ஆதார் அட்டைக்கு புகைப்படம், உடற்கூறுகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம் 10 பள்ளிகளில் செவ்வாய்க்கிழமை (செப்.15) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தி:
மதுரை மாவட்டத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பதிவு செய்வதற்கு பள்ளிக் குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் முதல்கட்டமாக 10 பள்ளிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. ஈ.வெ.ரா. பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தெற்குவெளி வீதி. புனித அந்தோணியார் நடுநிலைப் பள்ளி, கூடல் நகர். டி.வி.எஸ். ஆரம்பப் பள்ளி, லெட்சுமிபுரம், ஜெய்ஹிந்த்புரம். மங்கையர்க்கரசி நடுநிலைப் பள்ளி, மணிநகரம். ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, ஒத்தக்கடை. ஆர்.சி. நடுநிலைப் பள்ளி, சிவகங்கை சாலை, மேலூர். ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, வாடிப்பட்டி. ஆர்.சி. கிளை தொடக்கப் பள்ளி, கவுண்டன்பட்டி சாலை, உசிலம்பட்டி. காந்தி நிகேதன் தொடக்கப் பள்ளி, தே.கல்லுப்பட்டி. பி.கே.என். தொடக்கப் பள்ளி (வடக்கு), திருமங்கலம் ஆகிய பள்ளிகளில் இந்த முகாம் நடைபெறுகிறது.
இப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பதிவு செய்யாமல் விடுபட்டிருந்தால், இந்த முகாமில் பதிவு செய்து கொள்ளலாம். மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இந்த முகாம் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக