மாவட்டம் வாரியாக அரசு பள்ளிகளில், காலியாகஉள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் குறித்து, பள்ளி கல்வித்துறை விவரம் சேகரிக்கிறது.அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல், பதவி உயர்வு, பணி நிரவல் ஆகியவற்றுக்கான கலந்தாய்வு மாநிலம் முழுவதும் நடந்தது.
சில ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான வாய்ப்பு இருந்தும் அதில் பங்கேற்க விரும்பவில்லை.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி, தமிழக அரசின் கல்வி நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் முழுமையான நடவடிக்கை, பள்ளி ஆசிரியர்களுக்குள் நிலவும் அரசியல் மற்றும் மோதல் போக்கை சமாளித்தல், பள்ளியை நிர்வகித்தல், பள்ளியில் நடக்கும் பிரச்னைகளை சமாளித்தல் போன்ற சவாலான பொறுப்பு, தலைமை ஆசிரியர்களுக்கு இருப்பதால் சிலர், அப்பொறுப்பை விரும்புவதில்லை.
கலந்தாய்வில் பங்கேற்று இடமாறுதல் பெற்று தலைமை ஆசிரியர்கள், வேறு பள்ளிகளுக்கு சென்றுள்ள பட்சத்தில், பழைய பள்ளியில் பணியிடம் காலியாகி விடுவதால், மாணவர்களின் கல்வி தரம் பாதிக்கப்படும். இதற்கு தீர்வு காணும் விதமாக, மாவட்டம் வாரியாக, அரசு பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் குறித்து, விவரம் சேகரித்து அனுப்ப, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக