பி.எட்., கல்லுாரிகளில் காலியாக உள்ள, 777 இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும், 21 கல்வியியல் கல்லுாரிகளில், 1,777 பி.எட்., இடங்களை நிரப்ப முதற்கட்ட கலந்தாய்வு நடந்தது. இதில், 1,000 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
மீதமுள்ள, 777 இடங்களை நிரப்ப, சென்னை, லேடி வெலிங்டன் கல்லுாரி மூலம், இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதற்கான பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.வரும், 14ம் தேதி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்தினர் மற்றும் கணிதத்தில் பெண்கள் மட்டும் பங்கேற்கலாம்.
வரும், 15ம் தேதி இயற்பியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் வேதியியல் பாடங்களுக்கும்; 16ம் தேதி தமிழ், ஆங்கிலம், புவியியல், வரலாறு, பொருளியல், கணினி அறிவியல், இல்ல அறிவியல் மற்றும் வணிகவியல் பாடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக