லேபிள்கள்

12.10.15

உலக சிக்கன நாளை முன்னிட்டு அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்த உத்தரவு

உலக சிக்கன நாளை முன்னிட்டு, நிதி சிக்கனத்தை வலியுறுத்தும் போட்டிகளை மாணவர்களிடம் நடத்த, அனைத்து
பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது; இதில், பணத்தை சிக்கனப்படுத்துவது குறித்த அறிவுரைகள் வழங்கப்பட உள்ளன.சர்வதேச சிறுசேமிப்பு மற்றும் சிக்கன நாள் வரும், 30ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.


இதையொட்டி, அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும், சிக்கனத்தை வலியுறுத்தும் போட்டிகள் நடத்த, பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.நிதியை சிக்கனமாக பயன்படுத்துதல்; இந்திய ரூபாயின் உள்நாடு மற்றும் சர்வதேச மதிப்பு;வங்கிகளின் சிக்கன மற்றும் சேமிப்பு திட்டங்கள்; குடும்பங்களில் சிக்கனத்தைபேணுவது போன்ற பல தலைப்புகளில் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்படும்.பணத்தை வீணடிக்கா மல், அதை சேமிப்பது குறித்து விளக்கம் அளிக்கவும், அரசு மற்றும் அரசு உதவிபெறும்பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக